'தயார் நிலையில் இருங்கள்' - ரஷ்ய அணு ஆயுத தடுப்புப் படைக்கு அதிபர் புதின் உத்தரவு

'தயார் நிலையில் இருங்கள்' - ரஷ்ய அணு ஆயுத தடுப்புப் படைக்கு அதிபர் புதின் உத்தரவு
'தயார் நிலையில் இருங்கள்' - ரஷ்ய அணு ஆயுத தடுப்புப் படைக்கு அதிபர் புதின் உத்தரவு
Published on

உக்ரைன் போர் தீவிரமாகி வரும் நிலையில், தங்கள் நாட்டு அணு ஆயுத தடுப்புப் படையை தயார் நிலையில் இருக்குமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ கூட்டணி நாடுகளும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. மேலும், ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன.

இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ராணுவத் தலைமை தளபதி ஆகியோருடன் இன்று அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்புப் படையை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அவர் உத்தரவிட்டார். இதுகுறித்து மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் பேசிய புதின், "ரஷ்யாவுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடையை விதித்திருக்கின்றன. ரஷ்யா குறித்து நேட்டோ நாடுகள் தரக்குறைவான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன. இதுபோன்ற அசாதாரண சூழல் நிலவுவதால், அணு ஆயுத தடுப்புப் படையை தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டிருக்கிறேன்" என்றார்.

உக்ரைன் மீது போர் தொடுத்தன் மூலமாக உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் ரஷ்யா, தற்போது அணு ஆயுத தடுப்புப் படையை தயார் நிலையில் இருக்குமாறு கூறியிருப்பது பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com