போர்ச் சூழலில் இருப்பவர்கள் தற்காத்துக் கொள்வது எப்படி?- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி விளக்கம்

போர்ச் சூழலில் இருப்பவர்கள் தற்காத்துக் கொள்வது எப்படி?- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி விளக்கம்
போர்ச் சூழலில் இருப்பவர்கள் தற்காத்துக் கொள்வது எப்படி?- ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி விளக்கம்
Published on

போர் நடைபெறும் இடத்தில் சிக்கியிருப்பவர்கள், மீட்புக்குழு வரும் வரை எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என விளக்குகிறார் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி தியாகராஜன்.

போர் பகுதியில் சிக்கியிருப்பவர்கள் தற்காத்துக் கொள்ள வேண்டும்?

இது குறித்து விளக்கமளித்துள்ள ராணுவ அதிகாரி கர்னல் தியாகராஜன்...

  • உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப கொடுக்கப்படும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும்
  • கட்டடத்தின் ஜன்னல், கதவுகளுக்கு அருகில் இருக்க கூடாது
  • கட்டடத்தின் மூலையில், கான்க்ரீட் தூண்களுக்கு அருகில் தங்கியிருப்பது நல்லது
  • தாக்குதல் சத்தம் கேட்டால் உடனடியாக தரையில் படுத்துவிட வேண்டும்
  • பவர் பேங்க் எடுத்துக்கொள்ள வேண்டும், செல்போனை முழுமையாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
  • நம் நாட்டின் தேசிக்கொடியை கையில் வைத்துக்கொள்ள வேண்டும்
  • பதுங்கு குழியை தவிர வேறு எங்கு தங்கினாலும் இரவில் மின்விளக்கை எரிய விடக்கூடாது
  • தாகம் எடுக்கும் போது மட்டும் குடிநீர் பருக வேண்டும்; முடிந்தளவிற்கு தண்ணீரை சேமிப்பது அவசியம்
  • இடம்பெயரும் போது குடிநீர், உணவு, சான்றிதழ்களை மட்டும் உடன் எடுத்துச் செல்வது நல்லது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com