ரஷ்ய படையெடுப்புக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனுக்கு நாசகார ஆயுதங்களை ஆஸ்திரேலியா அனுப்பி வைக்கவுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு ஆஸ்திரேலியா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்பட அந்நாட்டைச் சேர்ந்த 350 பேரின் சொத்துகளை முடக்கும் வகையில் பொருளாதார தடையை விதித்துள்ளது. மேலும், ரஷ்யாவுக்கு உதவிய பெலாரஸ் மீதும் அதிருப்தி அடைந்துள்ள ஆஸ்திரேலியா அந்நாட்டின் ராணுவ அமைச்சர் உள்பட 13 பேரின் சொத்துகளை முடக்கியுள்ளது.
இந்நிலையில், ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் உக்ரைனுக்கு நாசகார ஆயுதங்களை வழங்க ஆஸ்திரேலியா முடிவெடுத்துள்ளது. எந்த மாதிரியான ஆயுதங்கள், எந்த வழியில் அனுப்பப்படும் என்ற தகவல்களை ஆஸ்திரேலிய அரசு வெளியிடவில்லை.
இதையும் படிக்க: "அவர்களைவிட எங்களுக்கு குறைவுதான்" - முதல் முறையாக பாதிப்பை ஒப்புக்கொண்ட ரஷ்யா