வாணியம்பாடியில் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்த பெண் மரணம் - கணவர் மீது உறவினர்கள் புகார்

வாணியம்பாடியில் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்த பெண் மரணம் - கணவர் மீது உறவினர்கள் புகார்
வாணியம்பாடியில் சாதிமறுப்பு காதல் திருமணம் செய்த பெண் மரணம் - கணவர் மீது உறவினர்கள் புகார்

வாணியம்பாடியில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை தர காலதாமதம் செய்வதாக அரசு மருத்துவமனையை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கல்மண்டபம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஜெயப்ரீத்தி என்பவருக்கும் வெள்ளகுட்டை பகுதியை சேர்ந்த அன்பு என்பவருக்கும் சாதி மறுப்பு காதல் திருமணம் கடந்த வருடம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

மிட்டூர் பகுதியில் தனியாக குடும்பம் நடத்தி வந்த கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயபிரீத்தி தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். நேற்று மதியம் பெற்றோர் சமாதானம் செய்து கணவர் அன்புடன் அனுப்பி வைத்த நிலையில், நேற்று மாலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக ஜெயபிரீத்தியின் வீட்டாருக்கு அவரது கணவர் அன்பு தெரிவித்துள்ளார்.

இதனை மறுத்த பெண்விட்டார் ஜெயபிரீத்தி தற்கொலை செய்து கொள்ளவில்லை எனவும் கணவர் அன்பு கொலை செய்து விட்டார் எனவும் குற்றம் சாட்டினார். நேற்று மாலை சடலத்தை கைப்பற்றிய குரிசிலாப்பட்டு காவல் துறையினர் உடலை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இதுவரையிலும் பெண்ணின் சடலத்தை தர காலதாமதம் செய்து வருவதாக கூறி உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அவரது சொந்த ஊரான வாணியம்பாடி கல்மண்டபம் பகுதியில் ஆம்பூர் - வாணியம்பாடி சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேரம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாணியம்பாடி துணை கண்காணிப்பாளர் பழனி செல்வம் தலைமையில் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் விரைவில் சடலத்தை பெற்றுத் தருவதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com