[X] Close

ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்; நிரந்தர முதல்வர் எடப்பாடி -அதிமுக தொண்டர்கள் முழக்கம்

சினிமா

ops---eps

 இன்று கூடிய அதிமுக உயர்மட்டக்குழுவில் தொண்டர்கள் ’’ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்” , “நிரந்தர முதல்வர் எடப்பாடி” என மாறி மாறி முழக்கமிட்டனர்

கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மறைந்ததையோட்டி அவரின் நம்பிக்கைக்குரிய ஓ.பி.எஸ் முதவரானார். அதன்பிறகு அவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டப் பின்னர், சசிகலா அதிமுகவின் முதல்வராக பொறுப்பேற்க முற்பட்டபோது, ஓ.பி.எஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி ’தர்மயுத்தம்’ நடத்தி சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.

image


Advertisement

இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூர் சிறைக்கு சென்றுவிடவே, அவரின் நம்பிக்கைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், பிரிந்திருந்த ஓ.பி.எஸ் அணியும், இ.பி.எஸ் அணியும் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணைந்தார்கள். ஓ.பி.எஸ் துணைமுதல்வராக நியமிக்கப்பட்டார்.

image

இந்நிலையில், வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ’யார் முதல்வர் வேட்பாளர்?’ என்ற சர்ச்சை சமீபத்தில் அதிமுகவில் எழுந்தது. இந்நிலையில், இன்று அதிமுகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் உயர்மட்டக்குழு கூடியது.


Advertisement

image

இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்துகொண்டார்கள். அப்போது அங்கு கூடிய தொண்டர்கள், ’’ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்” , “நிரந்தர முதல்வர் எடப்பாடி” என மாறி மாறி முழக்கமிட்டனர். 


Advertisement

Advertisement
[X] Close