[X] Close

நீட் தேர்வை தொடர்ந்து எதிர்ப்போம்: செங்கோட்டையன்

We-will-be-against-NEET-always---Sengottaiyan


தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இருப்பினும், மத்திய அரசின் பொதுத்தேர்வுகளை தமிழக மாணவர்கள் அச்சமின்றி எதிர்க்கொள்ளும் வகையில் 54ஆயிரம் கேள்வி பதில்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிடுவதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். மேலும், மாநில அரசு பள்ளிகளின் தரத்தை மத்திய அரசு பள்ளிகளுக்கு நிகராக உயர்த்துவது குறித்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக செங்கோட்டையன் தெரிவித்தார். கோவையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.


Advertisement

Advertisement
[X] Close