கொரோனா சிகிச்சையை தாமதிப்பது ஆபத்து: எச்சரிக்கும் அரசு பொதுநல மருத்துவர்!

கொரோனா சிகிச்சையை தாமதிப்பது ஆபத்து: எச்சரிக்கும் அரசு பொதுநல மருத்துவர்!
கொரோனா சிகிச்சையை தாமதிப்பது ஆபத்து: எச்சரிக்கும் அரசு பொதுநல மருத்துவர்!

‘கொரோனா நோய் தொற்றுக்கான சிகிச்சையை தாமதிப்பது மிகவும் ஆபத்தில் நம்மை கொண்டு சேர்க்கலாம்’ என்று அரசு பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘’கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு முதல் வாரத்திற்குள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெறுபவர்களை விட, இரண்டாவது வாரத்தில் கண்டறிந்து தாமதமாக சிகிச்சைக்கு செல்பவர்களிடையே வைரஸால் உண்டாகும் நுரையீரல் நியுமோனியா வீரியமாக இருக்கின்றது

மேலும் எவ்வளவு சீக்கிரம் தொற்றை உறுதி செய்து சிகிச்சையை ஆரம்பிப்பது உயிரைக் காக்கும் செயலாக இருக்கிறது என்று பல ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.

இன்னும் மும்பை மருத்துவமனை ஒன்றில் இருந்து கிடைத்துள்ள தகவலின்படி, கொரோனா தொற்றால் சேதமடைந்த நுரையீரலானது நிரந்தரமாக சிதில நிலைக்குச்செல்வதாகவும் (Pulmonary fibrosis) தகவல்கள் கூறுகின்றன

அதனால் காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் தோன்றினால் உடனே பரிசோதனை செய்து மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சையை தாமதிப்பது மிகவும் ஆபத்தில் நம்மை கொண்டு சேர்க்கலாம்’’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com