[X] Close

நீட்- தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்

Stalin-condemns-TN-govt-regarding-NEET-issue

 

நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதற்கு எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதவி நாற்காலியை காப்பாற்றிக்கொள்வதற்காக எடப்பாடி தலைமையிலான அரசு தமிழ்நாட்டின் நலன்களை மத்திய அரசிடம் அடகு வைத்துக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டியுள்ளார். 85 சதவீத இட ஒதுக்கீடு செய்து வெளியிட்டுள்ள அரசாணை, மாணவர்கள் நலனை எந்த வகையிலும் பாதுகாக்கப் போவதில்லை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
நீட் விலக்கு மசோதாவுக்கு இசைவு தந்தால்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரவு என அதிமுக சார்பில் நிபந்தனை விதிக்காதது ஏன்? 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கிடைக்கப்போகும் பரிகாரம் என்ன என்று முதலமைச்சருக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நீட் தேர்வில் இருந்து விலக்களிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை விரைந்து பெறுவதற்கு போர்க்கால நடவடிக்கை எடுப்பதும், 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதும்தான் இப்பிரச்னைக்கு ஒரே தீர்வு என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close