[X] Close

திமுக எம்எல்ஏ-க்கள் கைதுக்கு எதிராக வழக்கு

Case-regarding-DMK-MLAs-arrest

 

திமுக எம்எல்ஏ-க்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவில் பங்கேற்க சென்ற திமுக எம்எல்ஏ-க்கள், புதுக்கோட்டை  பெரியண்ணன், திருமயம் ரகுபதி, ஆலங்குடி மெய்யநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அழைப்பிதழில் தங்கள் பெயர் இருந்தும், நிகழ்ச்சிக்கு வந்தால் பிரச்னை ஏற்படும் எனக் கூறி காவல்துறையினர் கைது செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.


Advertisement

இந்நிலையில் 3 திமுக எம்எல்ஏ-க்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கைதான ரகுபதி எம்எம்ஏ, புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனார். அழைப்பிதழில் தங்கள் பெயர் இருந்தும் கைது செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.. 


Advertisement

Advertisement
[X] Close