[X] Close

மார்ச் 27,28-ல் கோயம்பேடு காய்கறி சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

chennai-koyambedu-market-will-be-holiday-on-march-27and-28

நாளை மறுநாள் மற்றும் 28-ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

கொரோனா தொற்று உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் 
எண்ணிக்கை 18 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆக இருந்தது. இதற்கிடையே 
நேற்று நள்ளிரவு தமிழகத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

image


Advertisement

நேற்று மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 21 நாட்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு பிறப்பித்து உத்தரவிட்டார். 
நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது.

இந்நிலையில் சென்னையின் முக்கிய காய்கறி சந்தையாக பார்க்கப்படும் கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று காலை முதல் கூட்டம் குறைவாகவே உள்ளது. சிறு கடை வியாபாரிகள் மட்டுமே காய்கறிகள் வாங்கிச் செல்வதால் கூட்டம் குறைந்துள்ளது.

image


Advertisement

அதேபோல் காய்கறிகளின் விலையும் குறைந்துள்ளது. இந்நிலையில் நாளை மறுநாள் மற்றும் 28ம் தேதி கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காய்கறி மார்கெட்டுக்குச் செல்ல மக்களுக்கு அனுமதி இல்லை என்பதால் விடுமுறை அளிக்கப்படுவதாக கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close