[X] Close

சத்தியமங்கலத்தில் சிக்காமல் போக்குக்காட்டும் சிறுத்தை: நிம்மதி இழந்து தவிக்கும் மக்கள்

தமிழ்நாடு

Forest-officials-set-trap-for-cheetah-at-Erode

 ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சுற்றித்திரியும் சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே மேட்டூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறுத்தை தென்பட்டது. இதையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி கூண்டு வைத்தனர். ஆனால் கூண்டில் சிக்காத சிறுத்தை ப‌ல்வேறு பகுதிகளில் 6 ஆடுகளை கொன்றது. இதனையடுத்து, சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்‌.

image


Advertisement

சிறுத்தை அச்சுறுத்தல் காரணமாக விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியால் விவசாயிகளூம் தவித்து வருகின்றனர். இதனையடுத்து சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர். சிறுத்தையின் கால்தடம் பதி‌‌வாகியுள்ள ஜல்லியூர் பகுதியில் வ‌னத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர்.‌ விரைவில் சிறுத்தையை பிடிக்க வேண்டுமென்றும், அப்போது தான் நிம்மதியாக நடமாட முடியும் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவையே உலுக்கிய தெலங்கானா ஆணவக் கொலை: அம்ருதாவின் தந்தை தற்கொலை!


Advertisement

Advertisement
[X] Close