[X] Close

கொரோனா வைரஸ் எதிரொலி: வீட்டிலிருந்து பணியாற்றுமாறு ஊழியர்களுக்கு ட்விட்டர் அறிவுரை

உலகம்

Twitter-asks-all-employees-to-work-from-home-due-to-coronavirus

பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டர், தனது பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

70-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ள மனித கொல்லி வைரஸான கொரோனாவுக்கு, சீனாவில் மட்டும் 2,9‌00க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். சீனாவுக்கு அடுத்தப்படியாக ஈரானில்‌ 66 பேர் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர். அங்கு 1,500-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

image


Advertisement

இத்தாலியில் 41 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு 1,700-க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தென்கொரியாவில் 26 பேரும், ஜப்பானில் 6 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொருத்தவரையில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்‌யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக பல நாடுகளும் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. கைகுலுக்குதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டுமென்றும் குறிப்பிட்டுள்ளன. கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுமென்றும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.

image


Advertisement

இந்நிலையில் பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டர், தனது பணியாளர்களை வீட்டில் இருந்தபடியே பணிகளை கவனிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச சமூகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க உதவும் வகையில் ட்விட்டரின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஹாங்காங், ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் உள்ள பணியாளர்கள் கண்டிப்பாக வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என ட்விட்டர் அறிவுறுத்தி உள்ளது. ‌பணியாளர்களின் அத்தியாவசியமற்ற தொழில்முறை பயணங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கும் ட்விட்டர் தடை விதித்துள்ளது.

சர்வதேச பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் கொரோனா


Advertisement

Advertisement
[X] Close