[X] Close

இப்பவாவது கூட்டினாங்களே: மு.க.ஸ்டாலின் வரவேற்பு

TN-Assembly-session-to-resume-on-June-14--MK-Stalin-welcoming

சட்டமன்றத்தை இப்போதாவது கூட்டியிருப்பது வரவேற்கத்தக்கது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், ’சட்டமன்றத்தை இப்போதாவது கூட்டியிருப்பது உள்ளபடி வரவேற்கத்தக்கது. ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பல்வேறு மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்று நிதி ஒதுக்கீடு செய்யத் தான் இந்த பேரவைக் கூட்டத்தொடர். ஆனால் தற்போது  அதிமுக-வில் இருக்கக் கூடிய சூழ்நிலையை பார்த்தால், அவையெல்லாம் நடைபெறுமா என்ற கேள்விக்குறிதான் உள்ளது. திமுகவை பொறுத்தவரை எப்போதும் மக்கள் பிரச்னைக்குத்தான் குரல் கொடுக்கும். இந்த கூட்டத்தொடரிலும் மக்கள் பிரச்னைகளை தெளிவாக எடுத்துக் கூறுவோம்" என்றார்.

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என மைத்ரேயன் கூறியிருப்பது குறித்து மு.க.ஸ்டாலினிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதலளித்த அவர், ‘அவர் சொல்வதற்காக நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றார். தமிழக மக்களை பொறுத்தவரை, இந்த ஆட்சி உடனடியாக அகற்றப்பட வேண்டும். உடனடியாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற வேண்டும். அதன்மூலம் நல்லாட்சி தமிழகத்தில் உருவாக வேண்டும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close