[X] Close

107 வயதிலும் இளமையுடன் இருக்கும் ஆரோக்கிய மனிதர்

A-Man-Working-and-Walking-in-Age-107-in-Kotaikkanal

கொடைக்கானலைச் சேர்ந்த 107 வயது முதியவர்  நல்ல ஆரோக்கியத்துடனும் உற்சாகத்துடனும் வேலை செய்து வருகிறார். 


Advertisement

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தள்ளாத வயதிலும் தளராத, திடமான நடைபோட்டு வருகிறார் 107 வயது முதியவர் தேவராஜன். கொடைக்கானலில் பள்ளி ஒன்றில் விடுதி உணவு மேற்பார்வையாளராக இருக்கும் இவர், தினமும் அதிகாலை 4 மணிக்கு எழுந்து 2 கிலோ மீட்டர் நடந்து பள்ளி விடுதிக்கு வந்துவிடுகிறார். விடுதி மாணவர்களுக்கான சமையலில் உதவி செய்து மேற்பார்வை செய்கிறார். 


Advertisement

இந்த வயதிலும் சளைக்காமல் வேலை‌ செய்யும் இவர், உணவில் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதாக கூறுகிறார். இவரது மகன், மகள், பேரப்பிள்ளைகள், ‌அவர்களின் பேரப்பிள்ளைகள்‌ என 70 உறவுகள் இவருக்கு இருக்கின்றனர். இவரது உற்சாகமும், நினைவாற்றலும் மற்றவர்களுக்கும் உத்வேகம் தருவதாக பள்ளியின் தா‌ளாளர் கூறுகிறார். உழைப்பும், உணவுக்கட்டுப்பாடும், மன மகிழ்ச்சியுமே தன்னை வழிநடத்திச் செல்வதாக கூறி, இன்றைய இளைய தலைமுறைக்கு தேவராஜன் வழிகாட்டுகிறார். 


Advertisement

Advertisement
[X] Close