[X] Close

ஸ்டாலின் அரசியல் நாகரீகமற்றவர்: தமிழிசை

tamilisai-soundararajan-criticises-stalin

மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரீகமற்றவர் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசு தண்ணீர் பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும். சேகர் ரெட்டியுடன் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலற்ற ஆட்சியை பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே தர முடியும். கருணாநிதியின் வைரவிழாவிற்கு அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டும். பாஜக மதவாத கட்சி என்று திமுகவினர் பரப்பி வருகிறார்கள். வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசுடன் கூட்டணி வைத்திருந்த போது பாஜக, மதவாத கட்சி என்பது தெரியாதா? கருணாநிதியை வைத்து குறுகிய அரசியலை நடத்துகிறது திமுக. மு.க.ஸ்டாலின் அரசியல் நாகரிகமற்றவர் என அவர் விமர்சித்தார்.


Advertisement
Related Tags : tamilisai stalinstalin tamilisai

Advertisement

Advertisement
[X] Close