[X] Close

சேர்க்கை விண்ணப்பத்தில் மத தேர்வாக மனித நேயத்தை சேர்த்த முதல் பெண்கள் கல்லூரி

Kolkata-college-adds----Humanity----in-religion-tab-of-admission-forms

கொல்கத்தாவைச் சேர்ந்த பெத்தூன் கல்லூரி, தனது கல்லூரி ஆன்லைன் விண்ணப்பத்தில் மதம் என்ற பிரிவின் கீழ் ‘மனித நேயம்’ (Humanity) என்றொரு பிரிவை இணைத்திருப்பது மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. 


Advertisement

1879ம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண்கள் கல்லூரியான பெத்தூன் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசிய அளவில் மகளிருக்காக தொடங்கப்பட்ட முதல் கல்லூரி என்ற சிறப்புக்குரியது.

இந்நிலையில் இக்கல்லூரியின் இணையதளத்தில் உள்ள மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவத்தில் மதம் என்ற பிரிவின் கீழ் முதல் தேர்வாக மனித நேயம் என்ற பிரிவு இணைக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்ததாக இதர மதங்கள் பெயர் விருப்பத் தேர்வாக கொடுத்துள்ளனர். எந்தவொரு மத அடையாளமும் வேண்டாம் என நினைக்கும் மாணவர்கள், தங்களது மதமாக மனிதத்தைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இக்கல்லூரி நிர்வாகம் வழங்கியுள்ளது.


Advertisement

இது தொடர்பாக இக்கல்லூரியின் முதல்வர் மமதா ராய் சவுத்ரி கூறுகையில், “ஒரு சில மாணவர்கள் தாங்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை தெரியப்படுத்த விரும்பவில்லை. இதற்காக பிரத்யேக பிரிவு ஒன்றை உருவாக்க எண்ணினோம். அப்போது மத நம்பிக்கை இல்லை எனக் குறிப்பிடுவதற்கு பதிலாக மனிதநேயம் என்று குறிப்பிட்டால் பொருத்தமாக இருக்கும் என எண்ணினோம். அதனால் தான் மனிதநேயம் என விண்ணப்பத்தில் சேர்த்தோம். மனிதநேயம் அனைத்து மதத்திலும் உள்ளது” எனக் குறிப்பிட்டார்.


Advertisement

Advertisement
[X] Close