[X] Close

திமுக எந்த மதத்திற்கும் எதிரானதல்ல - மு.க.ஸ்டாலின்

DMK-is-not--against-any-religion-says-stalin

திமுக எந்தவொரு மதத்திற்கும் எதிரானதல்ல என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்


Advertisement

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளான இன்று திமுக தொண்டர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தனது பிறந்தநாளை முன்னிட்டு 'உங்கள் சகோதரனின் குரல்' என்ற தலைப்பில் அக்கட்சியின் தொண்டர்களுக்காக வீடியோ பதிவை ஒன்றை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். 


Advertisement

அதில் திமுக எந்த மதத்திற்கும் எதிரானதல்ல என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசியுள்ள அவர்,திமுக மீது கலங்கம் சுமத்த விரும்பியவர்கள், திமுக ஒரு மதத்துக்கும், ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கும் எதிரானது என்றும் பொய் பரப்பினார்கள். நம் சகோதரத்துவம் மற்றவர்களைப் பொறாமை கொள்ளச் செய்தது. பிரிவினைவாதிகளுக்கு மட்டுமே திமுக பரம்பரை எதிரி. திமுக எந்தவொரு தனி மனிதனுக்கோ, மதத்திற்கோ, சமூகத்திற்கோ எதிரானதல்ல என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கலைஞர் இல்லாத தனது பிறந்த நாளை கொண்டாடும் விருப்பமில்லை எனவும், பிறந்தநாள் கொண்டாட்ட செலவுகளை ஏழைகளுக்கு நலத்திட்டமாக வழங்குங்கள் என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close