[X] Close

டிடிவி தினகரன் ஆஜரான போது தள்ளுமுள்ளு

Police-attack-journalists

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராக டிடிவி தினகரன் வந்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது ஊடக ஒளிப்பதிவாளர்களை போலீசார் தள்ளியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அந்நியச் செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்காக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் ஆஜரானார். அப்போது நீதிமன்றத்தின் வெளியே அதிகப்படியான கூட்டம் கூடியது. கூட்டத்தில் இருந்தவர்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு முன்னேற முயன்றனர். அப்போது அவர்களை தடுத்த காவல்துறையினர் அங்கு செய்தி சேகரிக்க நின்ற ஊடகங்களின் ஒளிப்பதிவாளர்களையும் பிடித்து தள்ளினர். இதனால் பத்திரிகையாளர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close