[X] Close

தேசிய விடுமுறைப் பட்டியலில் பொங்கல் இல்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

Pongal-is-not-on-the-list-of-compulsory-leave--pon-radhakirushnan

பொங்கல் பண்டிகை ஒருபோதும் தேசிய விடுமுறைப் பட்டியலில் இடம் பெற்றதில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.


Advertisement

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முந்தைய ஆண்டுகளின் விடுமுறைப் பட்டியலை சுட்டிக்காட்டினார். மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும் பொங்கல் தேசிய விடுமுறைப் பட்டியலில் இல்லை எனக் கூறிய பொன்.ராதாகிருஷ்ணன், அப்போது ஏன் திமுக போராட்டம் நடத்தாமல் மவுனமாக இருந்தது எனக் கேள்வி எழுப்பினார். அதிமுக ஏன் இதை பற்றி பேசவில்லை எனவும் பொன்.ராதாகிருஷ்ணன் கேட்டார். விஷூ, தசார போன்ற பண்டிகைகள் விடுமுறைப் பட்டியலில் இருப்பதையும் பொன்.ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார்.

முன்னதாக நேற்று கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் திருநாள் நீக்கப்பட்டதாக வந்த செய்தியைத் தொடர்ந்து அதிமுக கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close