[X] Close

சினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை: சத்யராஜ் மகள் அறிக்கை

Divya-Sathyaraj-denied-in-a-film-career

தனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணமில்லை என்று நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா. ஊட்டச்சத்து மருத்துவரான இவர், மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் சினிமாவில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. 

இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’நான் சினிமாவில் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மை இல்லை. நான் சினிமா துறையை மதிக்கிறேன். அதிகமான சினிமா படங்களைப் பார்க்கிறேன். ஆனால் சினிமாதுறையில் பணியாற்ற வேண்டும் என்று நினைத்ததில்லை. ஊட்டச்சத்து தொடர்பான டாக்குமெண்டரி படத்தில் பங்கேற்றுள்ளேன். ஆனால், சினிமாவுக்கு வரும் எண்ணமில்லை. இப்போது நியூட்ரிஷியன் படிப்பில் பிஎச்டி செய்து கொண்டிருக்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close