[X] Close

ராமேஸ்வரம் வருகிறார் குடியரசுத் தலைவர்: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை

President-visit-Rameswaram-today

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ராமேஸ்வரம் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


Advertisement

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ராமேஸ்வரம் வருகிறார். அங்கு ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்யும் அவர், பின்னர் பேக்கரும்பில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார். குடியரசுத் தலைவர் வருகையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ராமநாதபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 2,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மண்டபம் ஹெலிகாப்டர் இறங்குதளத்திலிருந்து பாதுகாப்பு ஒத்திகையும் மேற்கொள்ளப்பட்டது.

இதனிடையே குடியரசுத் தலைவரின் வருகையால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள நள்ளிரவு முதல் இன்று மாலை 3 மணி வரை மீன்பிடிக்கச் செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close