[X] Close

ஜனாதிபதி தலையீட்டை மோடி ஏற்றுக்கொள்வார்: நாராயணசாமிக்கு தமிழிசை பதில்!

tamilisai-soundararajan-reply-to-Narayanasamy

மத்திய அரசு நிர்வாகத்தில் குடியரசுத் தலைவர் குறுக்கிட்டால் பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வார் என நாராயணசாமி கேள்விக்கு தமிழிசை சவுந்தரராஜன் பதிலளித்துள்ளார்.


Advertisement

மத்திய நிர்வாகத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் குறுக்கிட்டால் பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வாரா? என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியிருந்தார். அத்துடன் இந்த கேள்விக்கு பதிலளித்து விட்டு பாஜகவினர் மற்ற விவகாரங்களை பேச வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை, ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு ஆட்சி செய்ய நினைப்பதாகவும், ஆனால் அது நடக்காது என்றும் நாராயணசாமி கூறினார். இது ஜனநாயக படுகொலை மட்டுமின்றி, மக்கள் விரோத செயல் என்றும் அவர் குற்றம்சாட்டினார். 

இந்நிலையில் நாராயணசாமி எழுப்பிய கேள்விக்கு, மத்திய அரசு நிர்வாகத்தில் குடியரசுத் தலைவர் குறுக்கிட்டால் பிரதமர் மோடி ஏற்றுக்கொள்வார் என பாஜக தமிழக தலைவர் தமிழிசை பதிலளித்துள்ளார். அத்துடன், இதற்கு முன் இருந்த ஆளுநர்கள் அனைவரும் தங்களது வளாகத்திற்குள் மட்டுமே இருந்ததால், அனைவரும் அப்படி இருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்றும் கூறினார். ஆளுநர்களுக்கு என்று அரசியல் அமைப்பு சட்டத்தில் சில அதிகாரங்கள் இருக்கின்றன, சில பகிர்வுகள் இருக்கின்றன. அதைத்தான் தமிழக ஆளுநர் செய்தார் என்றும் தமிழிசை தெரிவித்தார். 


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close