சிவகாசியில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

சிவகாசியில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா
சிவகாசியில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா

தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிவகாசியில் இன்று நடைபெற உள்ளது.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தமிழக அரசு சார்பில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சிவகாசியில் இன்று நடைபெற உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்டோர் இவ்விழாவில் கலந்துகொள்கின்றனர்.

விழாவில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்குவதுடன்இ நிறைவடைந்த அரசுத் திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார். விழாவையொட்டி சிவகாசி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com