[X] Close

பிரதமர் மோடியுடன் தம்பிதுரை திடீர் சந்திப்பு

ADMK-Thambidurai-meets-PM-Modi

டெல்லியில் பிரதமர் மோடியை மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சந்தித்து பேசியுள்ளார்.

தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. முதலமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், அதிமுக பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தலைமையில் ஒரு அணியாகவும் அதிமுக-வினர் பிரிந்து உள்ளனர்.

இந்நிலையில் அதிமுக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி இன்றுடன் நிறைவு பெறுகிறது. வழக்கமாக கூட்டத்தொடர் நிறைவுபெறும் போது பிரதமரை சபாநாயகர், துணை சபாநாயகர் சந்திப்பது வழக்கம். அந்தவகையில் தான் கூட்டத்தொடர் முதல்பகுதி நிறைவு பெறுவதால் மரியாதை நிமித்தமாக பிரதமர் மோடியை சந்தித்து பேசியதாக தம்பிதுரை தெரிவித்துள்ளார். இதில் தமிழக அரசியல் சூழல் குறித்து எதுவும் பேசவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். தம்பிதுரை சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close