[X] Close

புதுச்சேரி வாலிபருக்கு அரிவாள் வெட்டு: ஆளுநர் அலுவலகம் முன் தர்ணா

puducherry-governor-office-dharna

புதுச்சேரி வைத்திக்குப்பத்தில் வாலிபர் வெட்டப்பட்ட சம்பத்தை கண்டித்து உறவினர்கள் துணைநிலை ஆளுநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Advertisement

புதுச்சேரி வைத்திக்குப்பத்தை சேர்ந்தவர் ரூபன், கல்லூரி மாணவனான இவரை மர்ம நபர்கள் வெட்டிவிட்டு சென்றுள்ளனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவனை உறவினர்கள் மீட்டு அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் நடத்தி விசாரணையில் முன் விரோதம் காரணமாக மாணவன் வெட்டப்பட்டது தெரியவந்தது. மாணவன் வெட்டப்பட்டதால் ஆத்திரமடைந்த உறவினர்கள் இன்று இரவு திடீரென ஆளுநர் முற்றுகையிட்டு நியாயம் கேட்டு முறையிட முயன்றனர்.

அப்போது போலீசார் தடுப்புக்கட்டைகளை அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது உறவினர்கள் ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக நடைபெற்ற தர்ணா போராட்டத்தால் ஆளுநர் மாளிகை அருகே போலீசார் குவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close