ஆஃப்கனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் இல்லை: அமெரிக்காவிடம் இந்தியா தகவல்

ஆஃப்கனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் இல்லை: அமெரிக்காவிடம் இந்தியா தகவல்
ஆஃப்கனுக்கு படைகளை அனுப்பும் திட்டம் இல்லை: அமெரிக்காவிடம் இந்தியா தகவல்

ஆஃப்கானிஸ்தானுக்கு படைகளை அனுப்பும் திட்டம் இல்லை என அமெரிக்காவிடம் இந்தியா தெரிவித்துள்ளது.

டெல்லி வந்துள்ள அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் பேசினர். முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் மேட்டிஸ் சந்தித்து பேசினார். போர் விமானங்கள் வாங்குவது உள்ளிட்டவை குறித்து மேட்டிஸ் உடன் விவாதிக்கப்பட்டது. அப்போது ஆஃப்கானிஸ்தானுக்கு இந்திய படைகளை அனுப்ப வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்க முடியாது என நிர்மலா சீதாராமன் கூறியதாக தெரிகிறது.

டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபரான பின் அந்நாட்டை சேர்ந்த முக்கிய தலைவர் ஒருவர் இந்தியா வருவது இதுவே முதல்முறை ஆகும். பாதுகாப்பு மற்றும் வர்த்தக ரீதியாக உலக அரங்கில் சீனாவின் ஆதிக்கம் வலுத்து வரும் நிலையில் அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் மேட்டிஸின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com