[X] Close

’அரசு தூங்குகிறது’ கமல் ட்வீட்

tamilnadu-government-is-sleeping-kamal-new-twit

அரசு தூங்குகிறது என்று கமல் நேரடியாகவே குற்றம்சாட்டி ட்விட்டரில் தனது கருத்தை பதிவிட்டு உள்ளார்.

கமல்ஹாசன் அதிகம் அரசியல் பேசும் இடமாக டுவிட்டர் மாறியிருக்கிறது. தனது எண்ணங்களை நினைத்தவுடன் தட்டிவிடும் களமாக அதை அவர் பயன்படுத்தி வருகிறார். அவர் சமீபத்தில் பதிவிட்டுள்ள கருத்தில் ”அரசு தூங்குகிறது. பெற்றோர்தான் விழித்திருக்க வேண்டும். இனி காவலர் நாம்தான். கேள்விக்கான பதிலை பெறாது அமையாதீர்’என குறிப்பிட்டுள்ளார். அதோடு அவர் தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். “செவிடர்க்கு நான் ஊதிய டெங்கு ஜூர சங்கு வீண். கோபாலபுரம் பள்ளி மாணவன் பார்கவ் பலி. டெங்கு மரணம் தவிர்க்க ஆவண செய்யா அரசு அகல வேண்டும்’’ என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.


 


Advertisement

வீடியோ

Related Tags : kamalnew twittamilnadu

Advertisement

Advertisement
[X] Close