[X] Close

மாணவிகளை செல்போனில் படமெடுத்த இளைஞர்: காவல் நிலையத்தில் ஒப்படைத்த மாணவர்கள்

குற்றம்

Youth-filming-students-on-cell-phones-Students-handed-over-to-the-police-station

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாலையில் செல்லும் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களை புகைப்படம் எடுத்த இளைஞரை, கையும் களவுமாக பிடித்த கல்லூரி மாணவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பல்லடம் எம்.ஜி.ஆர் சாலையில் உள்ள அரிசி கடையில் வேலை பார்க்கும் அகமது மொய்தீன் என்பவர், அந்த வழியாக சென்ற கல்லூரி மாணவிகளை தனது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த கல்லூரி மாணவிகள் தங்களுடன் வந்த கல்லூரி நண்பர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அகமது மொய்தீனிடம் இருந்த செல்போனை கல்லூரி மாணவர்கள் பறித்தனர்.

image


Advertisement

பின்னர் அந்த போனை ஆய்வு செய்தபோது அவ்வழியாக செல்லும் கல்லூரி மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் மட்டுமின்றி அரிசி கடைக்கு வந்த பெண்களையும் போட்டோ மற்றும் வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் அகமது மொய்தீனை பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அகமது மொய்தீன் கடந்த சில மாதங்களாகவே அவ்வழியாக சென்ற பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை புகைப்படம் எடுத்தது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பல்லடம் போலீசார், எதற்காக புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கப்பட்டது, வேறு எங்காவது இது போன்ற செயல்களில் ஈடுபட்டாரா என்பது குறித்தும் அகமது மொய்தீனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close