[X] Close

வெளிநாடுகளில் இருந்து பெங்களூர் வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய தனிமை

இந்தியா

7-day-quarantine-must-for-international-passengers-testing-COVID-negative-on-arrival-in-Bengaluru
'வெளிநாடுகளில் இருந்து பெங்களூர் வருபவர்கள் 7 நாள்கள் கட்டாய தனிமையில் வைக்கப்படுவார்கள்' என சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
 
தென் ஆப்பிரிக்கா, இஸ்ரேல் நாடுகளில் 'ஒமிக்ரான்' என்ற உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ், இதற்கு முன்பு இருந்த கொரோனா வைரசை காட்டிலும் 5 மடங்கு வேகமாக பரவும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்கவும், கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து கர்நாடகாவுக்கு திரும்பி வந்த 2 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் பெங்களூருவில் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த இருவரில் ஒருவரின் மாதிரி, டெல்டா வகை கொரோனாவிலிருந்து வேறுபட்டதாக இருப்பதாக கர்நாடக சுகாதார அமைச்சர் நேற்று தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில், ஒமிக்ரான் பரவலை தடுக்க வெளிநாடுகளில் இருந்து பெங்களூர் வருபவர்களுக்கு 7 நாள் கட்டாய தனிமையில் இருக்க வேண்டும் என்று பெங்களூரு கிராமப்புற மாவட்ட சுகாதார அதிகாரி திப்பேசுவாமி தெரிவித்துள்ளார். 7 நாட்கள் தனிமைப்படுத்தலுக்குப் பிறகு அவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்றும் இவ்வாறு 598 வெளிநாட்டுப் பயணிகள் கண்காணிப்பில் உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Advertisement

Advertisement
[X] Close