[X] Close

5 மணிநேரமாக கொட்டித் தீர்த்த கனமழை: திருச்செந்தூர் கோயில் பிரகாரங்களில் புகுந்த மழைநீர்

வீடியோ ஸ்டோரி

கனமழை காரணமாக திருச்செந்தூர் கோயிலை சுற்றிலும் உள்ள நடைபாதை பிரகாரங்களில் மழைநீர் தேங்கியது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து பரவலாக  பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. தெற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 25 மற்றும் 26 ஆகிய நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

அதன்படி திருச்செந்தூர் மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதிகளான வீரபாண்டியன் பட்டணம், அடைக்கலாபுரம், ஆறுமுகநேரி, ஆத்தூர் மற்றும் உடன்குடி உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே வானமானது மேக மூட்டத்துடன் காணப்பட்டு லேசான சாரல் மழை பெய்து வந்த நிலையில், சரியாக 10 மணி முதல் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த  கனமழை பெய்து வருகின்றது.


Advertisement

இவ்வாறு பெய்து வரும் கனமழையினால் சாலைகளில் மழை நீரானது வெள்ளம் போன்று பெருக்கெடுத்து கரைபுரண்டு ஓடுகின்றது. இதனால் பொதுமக்கள்  தங்களது  அத்தியாவசிய தேவைகளுக்காக கூட வெளியே செல்ல முடியாமல் தங்களது வீட்டிற்குள்ளேயே முடங்கிடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  இடைவிடாமல் கொட்டி தீர்த்திடும் இந்த கனமழையால் சாலைகளில்  தேங்கியுள்ள மழை நீரால் வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மக்களின்  இயல்பு வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் திருச்செந்தூர் பகுதி முழுவதுமே மழைநீரால் சாலைகள் அனைத்தும் குளம் போன்று காட்சியளிக்கும் சூழலை காணமுடிகிறது. திருச்செந்தூர் மற்றும் திருச்செந்தூர் கோயிலை சுற்றிலும் உள்ள நடைபாதை பிரகாரங்களில் மழைநீர் தேங்கியது. 

திருச்செந்தூர் பேருந்து நிலையம், பேருந்து நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் சாலை என அனைத்துமே வெள்ளநீர் சூழப்பட்டுள்ளது. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close