பணமோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் லலித் கோயல் கைது

பணமோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் லலித் கோயல் கைது
பணமோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் அதிபர் லலித் கோயல் கைது

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஐஆர்இஓவின் தலைவரான லலித் கோயல், கடந்த வாரம் டெல்லி விமான நிலையத்திலிருந்து வெளிநாட்டிற்கு தப்ப முயன்றபோது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

ரியல் எஸ்டேட் குழுமமான ஐஆர்இஓவின் துணைத் தலைவர் லலித் கோயல், கடந்த வாரம் டெல்லி விமான நிலையத்திலிருந்து அமெரிக்கா செல்லவிருந்த விமானத்தில் தப்ப முயன்றபோது கைது செய்யப்பட்டார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நிதிக் குற்றங்களை விசாரிக்கும் அமலாக்கத்துறை இயக்குநரகத்தால் கோயலுக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. ஆனால், "விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கோயல் கைது செய்யப்பட்டார்" என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தை (FEMA) மீறிய வழக்கு தொடர்பாக 2010ஆம் ஆண்டு முதல் IREO மீதான விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிறுவனம் வீடு வாங்குபவர்களின் பணம், முதலீடு மற்றும் பங்கு தொகையான 77 மில்லியன் டாலர் தொகையை ஒரு வெளிநாட்டு அறக்கட்டளைக்கு மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது "பண்டோரா பேப்பர்ஸ்" என்ற வெளிநாட்டு நிதி பற்றிய உலகளாவிய விசாரணையிலும் இடம்பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com