[X] Close

சென்னை: பெருமழைகளை தாங்குமா தற்போதைய வடிகால் கட்டமைப்புகள்? - விரிவான பார்வை

வீடியோ ஸ்டோரி

சென்னையில் பல இடங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கும் நிலையில், இதுபோன்ற பெருமழை காலத்தை எதிர்கொள்வதற்கான மேம்படுத்தப்பட்ட மழைநீர் வடிகால் கட்டமைப்பு நம்மிடம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னை சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இடங்களில், 2071 கிலோமீட்டர் தொலைவுக்கு மழைநீர் வடிகால்கள் உள்ளன. இந்த வடிகால்கள் மூலம்தான் சென்னையில் மழைபெய்யும் காலங்களில் தண்ணீர் வடிய வேண்டும். காலநிலை மாற்றத்தால், கடந்த சில வருடங்களாக, குறுகிய நேரத்தில், அதிக அளவிலான மழைப்பொழிவுகள் வாடிக்கையாகி வருகின்றன. ஒருமணிநேரத்தில் பத்து முதல் 15 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்யும் நிகழ்வுகள் தொடர்கதையாகிவரும் சூழலில், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ற, மேம்படுத்தப்பட்ட மழைநீர் வடிகால் கட்டமைப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

 image


Advertisement

கால நிலை மாற்றத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் மழை நீர் மேலாண்மை திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும் என்கின்றனர் பொறியியல் வல்லுநர்கள். மழைநீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது தற்போதைய காலச் சூழலில் மிகவும் அவசியமாகிறது என்கிறார்கள் சூழல் செயற்பாட்டாளர்கள்.

காலநிலை மாற்றத்தின் தாக்கமாக பெருமழைகளை இனி எதிர்கொள்ள வேண்டியிருக்கும் நிலையில், மழைநீர் வடிகால்களின் அடிப்படை கட்டமைப்பிலேயே மாற்றங்கள் கொண்டுவரவேண்டியது அவசியமாகிறது.

இதனைப்படிக்க...சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நவ. 13ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close