[X] Close

சென்னை மந்தைவெளியில் மின்சாரம் தாக்கி முதியவர் உயிரிழப்பு

தமிழ்நாடு

man-death-due-to-electricity

சென்னை மந்தைவெளி சிக்னல் அருகில் 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் சாலையைச் சேர்ந்தவர் சக்திவேல் (81). மந்தைவெளி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை செய்து வந்தார். இன்று காலை வாட்ச்மேன் வேலையை முடித்துவிட்டு மந்தைவெளி பஸ் டிப்போ சிக்னல் அருகில் தேங்கியிருந்த தண்ணீரில் நடந்து வந்த போது, சிறிய மின் பெட்டியில் கசிவான மின்சாரத்தில் கால்வைத்ததாக தெரிகிறது. அப்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அபிராமபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 


Advertisement


Advertisement

Advertisement
[X] Close