[X] Close

“யார் இந்த காட்டுப்பய.. என்னமா அடி வெளுக்குறான்” - ரசிகர்களை மிரள வைத்த தோனியின் 183*

சிறப்புக் களம்

Fans-today-are-sharing-on-social-media-about-Former-Indian-Cricketer-MS-Dhoni-s-unbeaten-183-runs-against-Sri-Lanka-in-Jaipur-16-years-ago

இந்த சம்பவம் நடந்து 16 வருஷம் ஆச்சு. தோனியில் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த முத்தான ஆண்டாக அந்த 2005ம் ஆண்டு அமைந்துவிட்டது. ஒரே ஆண்டில் தோனி இரண்டாவது செய்கையை கச்சிதமாக செய்து முடித்தார். முதலாவது ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக விளாசி தள்ளிய அந்த 148 ரன்கள். அதே ஆண்டு டிசம்பர் 31ல் தான் இலங்கைக்கு எதிராக ருத்ர தாண்டவம். சச்சின், சேவாக், டிராவிட் ஆகிய சீனியர் வீரர்களை எதிரே நிற்க வைத்து வானவேடிக்கை காட்டியிருந்தார் தோனி. 

image

விதை போட்ட கங்குலி!


Advertisement

தோனியின் அந்த ஆட்டத்திற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி எடுத்த முக்கியமான முடிவுதான். தோனி தனது 

முதலாவது சர்வதேச போட்டியை 2004ம் ஆண்டு டிசம்பரில்தான் விளையாடினார். மிகக்குறைவான போட்டிகளிலேயே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 

தோனியை மூன்றாவது வீரராக களமிறக்கி சோதனை செய்தார் கங்குலி. கைமேல் பலனாக 148 ரன்கள் விளாசியிருந்தார் அவர். அந்த வகையில் தான் இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியிலும் டிராவிட் ஒரு முடிவு செய்தார். 299 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் 


Advertisement

சச்சின் டெண்டுல்கர் வெறும் 2 ரன்களில் ஆட்டம் இழந்துவிட்டார். அப்போது மூன்றாவது வீரராக தோனியை களமிறக்கினார் கேப்டன் ராகுல் டிராவிட். அந்த முடிவு அவருக்கு ஜாக்பாட் அடிக்க வைத்தது. 

image

சேவாக்கை அசர வைத்த தோனி!

இந்திய அணியில் தொடக்க வீரராக களமிறங்கும் சேவாக் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடக் கூடியது. தன்னுடன் இருக்கும் சக வீரர் 10 ரன்கள் எடுப்பதற்குள் சேவாக் 20 ரன்கள் விளாசி விடுவார். ஆனால், அன்றையப் போட்டியில் நடந்ததே வேறு. சேவாக்கை வைத்துக் கொண்டு படம் காட்டினார் தோனி. 

சேவாக் வழக்கம்போல் ஆட்டத்தின் முதல் பந்திலே பவுண்டரி விளாசினார். ஆனால், சச்சின் முதல் ஓவரின் 5வது பந்திலேயே ஆட்டமிழக்க தோனி களத்திற்கு வந்து சேர்ந்தார். சிக்ஸர் பவுண்டிகளாக விளாசிய தோனி 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். ஆனால், சேவாக் அப்பொழுதான் 32 ரன்கள் எடுத்து இருந்தார். 

இப்படி வழக்கமாக நடக்காது. தோனி சிக்ஸர் விளாசிய பொழுதெல்லாம் அவரை அன்பாக தட்டிக் கொடுத்தார் சேவாக். 

image

தாங்க முடியாத வலியுடனே சீறிய தோனி!

ஆட்டத்தின் 18வது ஓவரில் பந்தை இறங்கி அடிக்க முற்பட்ட அவருக்கு தசைப்பிடிப்பு போன்று வலி ஏற்பட்டது. வலி தாங்க முடியாமல் துடித்தார். வலியால் துடித்தாலும் தன்னுடைய அதிரடியை அவர் நிறுத்தவே இல்லை. 40 பந்துகளில் அரைசதம் விளாசிய தோனி 85 பந்துகளில் சதத்தையும் பதிவு செய்தார். 

தொடர்ந்து அதிரடி காட்டிய அவர் அடுத்த 50 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். மொத்தமாக 145 பந்துகளில் 183 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 299 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி 46.1 ஓவரிலேயே எட்டிவிட்டது. அன்றைய போட்டியில் தோனியை தவிர்த்து மற்ற யாரும் அரைசதம் கூட 

அடிக்கவில்லை. அது கிட்டதட்ட ஒன்மேன் ஷோ தான். 

image

தோனியின் ஆட்டம் இரண்டு வகை!

தோனியின் ஆட்டத்தை இரண்டாக பிரிக்கலாம். கேப்டன் ஆவதற்கு முன்பு . கேப்டன் ஆன பிறகு. கேப்டன் ஆவதற்கு தோனி ஆட்டம் அதிரடி ரகம். அவர் ஒரு காட்டுத்தனமான ஸ்டைலால் ரசிகர்களை மிக விரைவில் தன் பக்கம் ஈர்த்தார். அதிரடி காலங்களில் அவர் நீண்ட முடி வளர்த்திருந்தார். ஆனால், கேப்டன் ஆன 

பிறகு தன்னுடைய ஆட்டத்தின் போக்கை மாற்றிக் கொண்டார் தோனி. அணியின் வெற்றிக்கு தகுந்தார் போல் கடைசி வரை விளையாடும் பாணிக்கு அவர்  மாறினார். தன்னுடைய அதிரடியை அவர் கைவிட்டார். ஐபிஎல் போட்டிகளில் அந்த அதிரடியை பார்க்க முடிந்தது வேறு கதை. ஆனால், சர்வதேச போட்டிகளில்  அவர் கேப்டனாக மாறாமல் இருந்திருந்தால் சேவாக்கை போல் இன்னொரு அதிரடி ஆட்டத்திற்கு பெயர் போனவராக மாறியிருப்பார். ஆனாலும், 350 ஒருநாள்  போட்டிகளில் விளையாடி அவர் 10,773 ரன்கள் குவித்து உள்ளார்.

ஜெய்ப்பூரில் 16 வருடங்களுக்கு முன்பு தோனி நிகழ்த்திய சம்பவத்தை ரசிகர்கள் இன்று சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

Advertisement
[X] Close