[X] Close

தோற்பது யாரானாலும் ஜெயிப்பது விளையாட்டாக இருக்கட்டும்.. இந்தியா-பாக். போட்டி ஓர் அலசல்

சிறப்புக் களம்

Pakistan-wins-India-in-T20-World-Cup-super-12-and-some-reaction-in-the-match-against-common-Man-in-India-for-cheering-Pakistan

உலகக் கோப்பை அரங்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி கடந்த ஞாயிறு அன்று வெற்றி பெற்றிருந்தது. இது உலகம் அறிந்த செய்து. ஆனால் அப்போது முதலே இந்தியாவில் சில எதிர்வினைகளும் எழுந்து வருவதை பார்க்க முடிந்தது. முதலில் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை வன்மமாக சில விமர்சனங்களை சிலர் சமூக வலைத்தளங்களில் முன்வைத்திருந்தனர். அதற்கு பின்னதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வக்கார் யூனிஸ் சர்ச்சையான கருத்தை சொல்லி அதற்காக மன்னிப்பும் கோரி இருந்தார். இப்படியாக சில எதிர்வினைகள் பேசு பொருளாகி இருந்தாலும். சாமானியர்கள் சிலரும் இந்த விவாகரத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 


Advertisement

image

ராஜஸ்தான், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், உத்தரப் பிரதேசம் என சாமானியர்கள் தொடர்ச்சியாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் செய்தது பாகிஸ்தான் நாட்டு வெற்றியை கொண்டாடியது தான். 


Advertisement

சம்பவம் 1!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் நஃபீசா அட்டாரி என்பவர் பாகிஸ்தான் வெற்றியை ‘வென்றோம்’ என வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் போட்டதற்காக கைது செய்யப்பட்டு, பிணையில் வெளி வந்துள்ளார். அவர் பணியாற்றிய பள்ளி நிர்வாகம் அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளது. இந்திய தண்டனை சட்டம் 153B விதியின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 9-ஆம் தேதியன்று அவர் வழக்கு விசாரணைக்காக ஆஜராக வேண்டி உள்ளது. 

image


Advertisement

சம்பவம் 2!

பஞ்சாப் மாநிலத்தில் இயங்கி வரும் இரண்டு தனியார் கல்விக் கூடங்களில் பயின்று வரும் உத்தரப்பிரதேசம், பீகார் மாநிலத்தை சேர்ந்த மாணவர்களுக்கும், காஷ்மீர் பகுதியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் காஷ்மீர் மாணவர்களை மற்ற மாநில மாணவர்கள் பலமாக தாக்கியுள்ளனர். 

அதோடு விடுதியில் காஷ்மீர் மாணவர்கள் தங்கியிருந்த அறைகளும் சூறையாடப்பட்டு உள்ளன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் முடிந்ததும் எழுப்பப்பட்ட கோஷம் தான் மாணவர்களிடையே மோதல் வெடிக்க காரணம் என போலீசார் தெரிவித்துள்ளனர். 

இப்படியாக பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடியோர் மீது தேசத்துரோக வழக்கும் பாயும் என தெரிவித்துள்ளார். இது இந்த விவகாரத்தில் மேலும் கவனத்திற்குள் கொண்டு வந்துள்ளது. 

விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டும்!

image

கிரிக்கெட் விளையாட்டு ஒரு ஜென்டில்மேன் கேம் என சொல்வதுண்டு. சமயங்களில் களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சில செயல்கள் சர்ச்சைக்குள்ளாவது உண்டு. அதுவும் இந்தியா - பாகிஸ்தான் என்றால் சொல்ல வேண்டாம். அது களத்தில் ஆடும் வீரர்கள் மட்டுமல்லாது களத்திற்கு வெளியே பார்வையாளர்களாக உள்ள அனைவரையும் காரசாரமான விவாதத்திற்கு கொண்டு வரும். பிரபலங்கள் தொடங்கி சாமானியர்கள் வரை இந்த பட்டியல் நீள்கிறது. 

2015, மார்ச் 24 : தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் விளையாடின. இதில் DLS முறையில் நியூசிலாந்து அணி 1 பந்து எஞ்சியிருக்க 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த தோல்வியினால் டிவில்லியர்ஸ் உட்பட தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் களத்தில் கண்கலங்கி நின்ற காட்சிகள் அனைத்தும் கிரிக்கெட் ரசிகர்களின் நீங்க முடியாது நினைவுகள். பலரும் அது தொடர்பாக அப்போது சமூக வலைத்தளங்களில் கருத்து சொல்லி இருந்தனர். இதில் இந்தியர்களும் அடங்குவர். இதில் ஒன்றுமே இல்லை. விளையாட்டை விளையாட்டாக பார்த்துள்ளனர். 

image

இதே போல ஒரு சம்பவம் நம் சென்னையிலும் நடைபெற்றுள்ளது. 1999 வாக்கில் இந்தியா - பாகிஸ்தான் விளையாடிய டெஸ்ட் போட்டி சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் வெறும் 12 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இருந்தது. வெற்றிக்கு பிறகு பாகிஸ்தான் வீரர்களின் ஆட்டத்திறனை பாராட்டும் வகையில் மைதானத்தில் போட்டியை பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் ஒவ்வொருவரும் எழுந்து நின்று கர ஒலி எழுப்பி அசத்தினர். இப்படி விளையாட்டை விளையாட்டாக பார்க்க வேண்டுமே தவிர அதனுள் வேண்டாத வெறுப்புகளை திணிப்பதும், கேம் ஸ்பிரிட்டை வெளிப்படுத்திய வீரர்களை பாராட்டுபவர்களை ஒடுக்குவதும் முறையானதல்ல என்ற கருத்துகளும் எழுகின்றன. பாகிஸ்தான் பத்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றதும் அவர்களை களத்தில் இருந்து முதலில் பாராட்டியது இந்திய கேப்டன் விராட் கோலி தான். ஏனென்றால் வீழ்வது யாராயினும் வெல்வது விளையாட்டு என்பது அவருக்கு தெரியும்.   

இனம், நிறம், மதம் என எந்தவித வேறுபாடுமின்றி அனைத்தையும் கடந்து மக்களை ஒன்றிணைப்பது தான் விளையாட்டு!

இதையும் படிக்கலாம் : 'ஆப்' இன்றி அமையா உலகு 7: 'தமிழ்நாடு மரக்களஞ்சியம்' - மரமும் மரம் சார்ந்த மகத்தான செயலி! 


Advertisement

Advertisement
[X] Close