[X] Close

தீபாவளி பண்டிகை: புதுச்சேரியில் ரேஷன் கார்டுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசி இலவசம்

இந்தியா

Deepavali-festival-2-kg-sugar-10-kg-rice-free-for-ration-card-in-Pondicherry

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு 2 கிலோ சர்க்கரை, 10 கிலோ அரிசியை அம்மாநில அரசு இலவசமாக வழங்குகிறது.


Advertisement

இது தொடர்பாக புதுச்சேரி அரசு செயலர் உதயகுமார் கூட்டுறவுத்துறை பதிவாளருக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தீபாவளியையொட்டி அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் 2 கிலோ சர்க்கரையும் பத்து கிலோ அரிசியும் இலவசமாக தர முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

அதனால் நியாயவிலை கடைகள் இயங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அத்துடன் கடைகளின் பட்டியல் விவரத்தையும் இரண்டு நாட்களுக்குள் தரவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close