[X] Close

தேர்தல் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த புகார்: அதிமுக கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது

வீடியோ ஸ்டோரி

கரூரில் தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அதிமுக மாவட்ட கவுன்சிலர், ஒன்றியச் செயலாளர் உள்ளிட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.


Advertisement

கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் பதவிக்கு கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற மறைமுகத் தேர்தலின்போது, மாவட்ட திட்ட அலுவலர் மந்தராச்சலம் எவ்வித விளக்கமும் கூறாமல் தேர்தலை ஒத்திவைத்ததாகப் புகார் எழுந்தது. அப்போது போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர், அந்த அதிகாரியின் காரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அச்சமயம் மந்தராச்சலத்தை மீட்க முயன்ற காவல்துறையினருக்கும் அதிமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதுதொடர்பாக மந்தராச்சலம் அளித்த புகாரின் பேரில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக 4 பேரை கைது செய்த காவல்துறையினர், நீதிபதி உத்தரவின்படி அவர்களை 15 நாள் நீதிமன்றக் காவலில் திருச்சி சிறையில் அடைத்தனர்.


Advertisement

இதனைப்படிக்க...”நவம்பர் 1 முதல் ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம்”: தெற்கு ரயில்வே அறிவிப்பு 


Advertisement

Advertisement
[X] Close