[X] Close

இங்கிலாந்து அணிக்கு திரும்பினார் பென் ஸ்டோக்ஸ்! ஆஷஸ் தொடரில் விளையாடுகிறார்!

வீடியோ ஸ்டோரி

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். சொந்த காரணங்களுக்காக அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து பென் ஸ்டோக்ஸ் நீண்ட ஓய்வை அறிவித்து சென்றிருந்தார். 

ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகி இருந்த நிலையில், இருபது ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. முன்னதாக ஆஷஷ் தொடருக்கான அணியிலும் அவர் இடம் பெறாமல் இருந்த சூழலில், அவர் மீண்டும் அணிக்கு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் அவரை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அனல் பறக்கும் ஆஷஷ் தொடருக்கான அணியில் இங்கிலாந்து நிர்வாகம் சேர்த்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close