[X] Close

தென் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாடு

Chennai-Meteorological-Department-has-forecast-heavy-rains-in-various-parts-of-Tamil-Nadu-for-the-next-four-days
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
 
image
குமரிக்கடல், மன்னார் வளைகுடா, கேரள கடலோரப் பகுதி, மாலத்தீவு, லட்சத்தீவு உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

Advertisement

Advertisement
[X] Close