[X] Close

’பிக்பாஸ்’ முகேன் ராவின் ‘வேலன்’ டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா

சினிமா

Actor-Suriya-releases-Velan-teaser-of-Bigg-Boss-Mugen-Rao

’பிக்பாஸ்’ புகழ் முகேன் ராவ் நடிக்கும் ‘வேலன்’ படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.

’பிக்பாஸ்’ மூலம் கவனம் ஈர்த்த முகேன் ராவ் நடிக்கும் ‘வேலன்’ படத்தை கவின் இயக்குகிறார். பிரபு, சூரி, தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். சூரி மலையாளியாக நடிக்கிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டப்பிங் பணிகளும் முடிந்துள்ளது.

சமீபத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், இன்று டீசர் வெளியாகி இருக்கிறது. இதனை, நடிகர் சூர்யா வெளியிட்டிருக்கிறார். சீனு ராமசாமியின் ‘இடிமுழக்கம்’ படத்தை தயாரிக்கும் கலைமகன் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். டீசரில், ‘நம்மலாள ஒருத்தவங்க மனசு நெறஞ்சி நிக்கனுமே தவிர.. கண் கலங்கி நிக்கக்கூடாது’ என்று பிரபு பேசும் வசனம் கவனம் ஈர்க்கிறது.


Advertisement


Advertisement

Advertisement

Advertisement
[X] Close