[X] Close

கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழ் குறைந்தது

கொரோனா வைரஸ்

India-sees-14146-new-COVID-infections-144-deaths-in-last-24-hrs-active-cases-decline-below-2-lakh
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா நோய்த்தொற்றால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், உயிரிழந்தோர் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,146 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 19,788 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 144 பேர் தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர்.
 
கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 95 ஆயிரத்து 846 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 34 லட்சத்து 19 ஆயிரத்து 749 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 லட்சத்து 52 ஆயிரத்து 124 ஆக அதிகரித்துள்ளது.
 
image
நாட்டில் நேற்று மட்டும் 41 லட்சத்து 20 ஆயிரத்து 772 கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 97 கோடியே 65 லட்சத்து 89 ஆயிரத்து 540 ஆக உள்ளது.
 
Related Tags : கொரோனா COVID-19

Advertisement

Advertisement
[X] Close