[X] Close

கைக்கு வந்த கேட்சை கோட்டை விட்ட தோனி - ’ஷாக்’ ஆன சிஎஸ்கே ரசிகர்கள்

விளையாட்டு

CSK-skipper-and-Wicket-Keeper-MS-Dhoni-dropped-the-catch-given-by-KKR-opening-batsman-Venkatesh-Iyer-in-IPL-final-2021

நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சென்னை விரட்டி வருகிறது. 

image

கொல்கத்தா அணிக்காக கில் மற்றும் வெங்கடேஷ் ஐயர் களம் இறங்கி உள்ளனர். இந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரை ஹேசல்வுட் வீசினார். அந்த ஓவரின் மூன்றாவது பந்தை எதிர்கொண்டார் வெங்கடேஷ். பந்து அவரது பேட்டில் பத்து அவுட் சைட் எட்ஜாகி இருந்தது. அது தோனியின் கைகளுக்கு சென்றது.


Advertisement

இருப்பினும் அதை பிடிக்க தவறினார் சென்னை அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பரான தோனி. முன்னதாக முதல் இன்னிங்ஸில் இதே போல ஒரு வாய்ப்பை சென்னை வீரர் டூ ப்ளசிஸ் கொடுத்த அதை கொல்கத்தா விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் வீணடித்திருப்பார். அதை பயன்படுத்தி டூ ப்ளசிஸ் 86 ரன்களை எடுத்திருந்தார். தற்போதுவரை வெங்கடேஷ் ஐயர் 15 பந்துகளில் 29 ரன்கள் எடுத்துள்ளார். கொல்கத்தா அணிக்கு ஒவ்வொரு போட்டியிலும் தவறாமல் ரன் குவித்து வருபவர் வெங்கடேஷ் ஐயர்.

தோனி அந்த கேட்சை நழுவவிட்ட போது வெங்கடேஷ் ஐயர் ரன் ஏதும் எடுக்கவில்லை.


Advertisement

Advertisement
[X] Close