[X] Close

தாக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியரின் உடலில் இருந்து துப்பாக்கி குண்டு கண்டெடுப்பு

தமிழ்நாடு

A-bullet-was-found-in-the-body-of-an-assaulted-TASMAC-employee-in-Sriperumbudur

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே கடந்த 4-ஆம் தேதி டாஸ்மாக் ஊழியர்கள் இருவர் தாக்கப்பட்டனர். அடையாளம் தெரியாத நபர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருந்தனர். 

தாக்குதலுக்கு உள்ளான துளசிதாஸ் என்ற ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு ஊழியரான ராம் என்பவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் அவரது உடலில் துப்பாக்கி குண்டு இருந்தது மருத்துவ பரிசோதனையில் கண்டறியப்பட்டது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் துப்பாக்கி குண்டு எடுக்கப்பட்டது.

இந்த குற்ற செயலுக்கான காரணம் என்ன? என்பதையும், குற்றவாளிகளும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close