[X] Close

”மதுரை மக்களே தடுப்பூசி போட்டுக்கோங்க” - நடிகர் சசிகுமார் வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

People-of-Madurai-should-be-vaccinated-Awareness-video-released-by-actor-Sasikumar

’நம்ம நல்லதுக்கு தான் சொல்றாங்க தடுப்பூசி போட்டுக்கோங்க’ என்று கூறி நடிகர் சசிகுமார் விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Advertisement

தமிழகம் முழுவதும் ஐந்தாவது முறையாக நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ள நிலையில், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்த வேண்டுமென தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், நடிகர் சசிகுமார் மதுரை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

image


Advertisement

அதில், மதுரை மாவட்டத்தில் நாளை ஐந்தாவது முறையாக தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் கொரானா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். முதல் அலை, இரண்டாம் அலை நிறைய பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டது. தொடர்ந்து மூன்றாவது அலை வரப்போவதாக கூறுகிறார்கள்.

image

அதனை தடுக்க அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுப்பது அவசியம். தமிழக அரசு நம்முடைய நல்லதுக்கு தான் தடுப்பூசி எடுத்துக்கொள்ள கூறுகிறார்கள் எனவே கட்டாயம் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டு வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Advertisement


Advertisement

Advertisement
[X] Close