[X] Close

அண்ணாமலை, வானதி உட்பட 700 பாஜக-வினர் மீது வழக்குப்பதிவு

கொரோனா வைரஸ்

Case-filed-against-700-BJP-members-including-Annamalai-and-Vanathi-srinivasan

சென்னையில் காளிகாம்பாள் கோயில் முன் போராட்டம் நடத்தியதற்காக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


Advertisement

நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதுமுள்ள கோயில்களில் வார இறுதியில் 3 நாட்கள் பக்தர்களுக்கு தடை விதித்த உத்தரவை திரும்பப் பெறக்கோரியும், வாரத்தின் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்காக கோயில்களை திறக்க வலியுறுத்தியும் தமிழகத்தில் உள்ள பிரசித்திபெற்ற 12 கோயில்களின் முன் பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் முன்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.

அனைத்து நாட்களிலும் கோயில்களை திறக்க வேண்டும்: தீச்சட்டி ஏந்தி பாஜகவினர்  ஆர்ப்பாட்டம் | BJP protests to open temples on all days |  Puthiyathalaimurai - Tamil News | Latest ...


Advertisement

தொடர்புடைய செய்தி: ”இல்லாத கொரோனாவை காரணம் காட்டி கோயிலை மூடுவதா?”- அண்ணாமலை

தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் 700 பேர் மீது கடற்கரை காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. கோவையில் போராட்டம் நடத்திய வானதி சீனிவாசன் மீது பந்தபசாலை காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close