[X] Close

ஐதராபாத் அணிக்காக பிரார்த்தனை செய்த சிஎஸ்கே ரசிகர்கள் - ஏன் தெரியுமா?

விளையாட்டு,சிறப்புக் களம்

CSK-fans-praying-for-Hyderabad-team-why

நேற்று நடைபெற்ற ஆர்.சி.பிக்கு அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் பெற்ற வெற்றி சிஎஸ்கேவுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கொரோனா காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு சுமார் 3 மாத இடைவெளிக்குப் பின்னர் இப்போது ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகிறது. நாளையுடன் லீக் போட்டிகள் முடிவைடைகின்றன. லீக் போட்டியில் இரண்டாவது போட்டியாக சிஎஸ்கேவும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியிடம் தோல்வியை தழுவியது சிஎஸ்கே. சிஎஸ்கேவின் முதல் ஆட்டமே அவர்களது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

ஐபிஎல் அட்டவணை அறிவிப்பு: ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் முதல் போட்டி! |  Bhoomitoday


Advertisement

ஆனால் அதையடுத்து பஞ்சாப்பை தோற்கடித்து வெற்றிக்கணக்கை தொடங்கியது சிஎஸ்கே. தொடர்ந்து ராஜஸ்தான், கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் என அடுத்தடுத்து அணிகளை தோற்கடித்து வெற்றி வாகை சூடியது சிஎஸ்கே. ஆனால் சிஎஸ்கேவின் நேர் எதிரி அணி என பெரும்பாலான ரசிகர்களால் கருதப்படும் மும்பை அணியிடம் மே 1ஆம் தேதி தோல்வியை தழுவியது.

CSK vs MI | IPL 2020: CSK CEO Viswanathan gives team verdict ahead of  opener against Mumbai Indians | Cricket News

அதன்பின்னர், கொரோனாவால் தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. அதில், கடந்த முறை தோற்ற மும்பை அணியிடமே சிஎஸ்கே அணியின் முதல் ஆட்டம் தொடங்கியது. ஆனால் இந்த முறை வெற்றி வாகை சிஎஸ்கேவின் பக்கம். தோற்ற இடத்திலிருந்தே மீண்டு எழுந்தது சிஎஸ்கே. ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர். அதன்பின்னர் மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி சிஎஸ்கே பறந்தது. பெங்களூரு, கொல்கத்தா, ஐதராபாத் என வெற்றியை பதிவு செய்துகொண்டே சென்றது.


Advertisement

image

கடந்த ஐபிஎல்லில் முதல் ஆளாக ஐபிஎல்லில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே இந்த முறை முதல் டீமாக ப்ளே ஆஃப்க்குள் நுழைந்தது. அந்த நேரத்தில்தான் சிஎஸ்கேவின் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ். தொடர்ந்து டெல்லியிடமும் தோல்வியை தழுவி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தை தவற விட்டு இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

IPL 2021: CSK vs RR match likely to be postponed as COVID threat looms  check latest updates | IPL 2021, CSK vs RR போட்டி நடக்காதா? CSK அணியில்  யாருக்கு தொற்று? விவரம் உள்ளே |

இருந்தாலும் முதல் இரண்டு இடங்களில் சிஎஸ்கே இருப்பது அவரது ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றி பெற்று விராட்கோலியின் பெங்களூரு அணியும் புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்தது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது. காரணம் ஐதராபாத் அணியை வெற்றி கொண்டால் பெங்களூரு அணி சிஎஸ்கே அணியை புள்ளிப்பட்டியலில் நெருங்கி விடும் என்பதால்தான். 

CSK players 'sad' to leave Chennai - Sportstar

எனவே சிஎஸ்கே ரசிகர்கள் ஐதராபாத் அணிக்காக பிரார்த்தனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். ஆம் எப்படியாவது ஐதராபாத் வெற்றி பெற்று ஆர்.சிபி தோற்க வேண்டும் என்பதே பெரும்பாலானோரின் எண்ணமாக இருந்திருக்கும். அதைப்போலவே அபுதாபியில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 141 ரன் எடுத்தது. 142 ரன் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய பெங்களூருவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

image

கேப்டன் கோலி 5 ரன்னில் வெளியேறினார். இது ஐதராபாத் அணி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் சிஎஸ்கே ரசிகர்களுக்கு உற்சாகத்தையே கொடுத்தது. எனினும் இளம் வீரர் தேவ்தத் படிக்கல் 41 ரன்னும் மேக்ஸ்வெல் 40 ரன்னும் எடுத்து தங்கள் அணியை வெற்றிக்கு மிக அருகே அழைத்துச் சென்றனர். கடைசி ஓவரில் 13 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் டிவில்லியர்ஸ் அந்த ஓவரை எதிர்கொண்டர். ஆனால் புவனேஸ்வர் குமார் இறுதி ஓவரை மிகவும் நேர்த்தியாக வீசி வெற்றியை மீட்டெடுத்தார். 4 ரன் வித்தியாசத்தில் வென்ற ஐதராபாத் ஆறுதல் வெற்றியை பதிவு செய்தது. இதனால் சிஎஸ்கே அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது இடத்திலும் மூன்றாவது இடத்தில் பெங்களூரு அணியும் நீடிக்கிறது. முதல் இடத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் இருப்பது குறிப்பிடத்தக்கது.

IPL 2021: Ziva Dhoni prays for CSK's win over DC; fans call it 'cutest  thing ever'

தற்போது சிஎஸ்கே 13 ஆட்டங்கள் விளையாடி 9 வெற்றிகளையும் 4 தோல்விகளையும் சந்தித்து 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆர்சிபி 13 ஆட்டங்கள் விளையாடி 8 வெற்றிகளையும் 5 தோல்விகளையும் சந்தித்து 16 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஒருவேளை ஐதராபாத் அணியுடன் ஆர்.சி.பி வெற்றி பெற்றிருந்தால் சிஎஸ்கே அணியுடன் சமநிலைக்கு வந்திருக்கும். ஆனாலும் சிஎஸ்கேவே இரண்டாம் இடத்தில் இருந்திருக்கும். இன்று நடக்கும் போட்டியில் ஒருவேளை சிஎஸ்கே அதிக ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று ஆர்சிபியின் அடுத்த போட்டியில் அந்த அணி அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் சிஎஸ்கே மூன்றாவது இடத்திற்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் அது பெரும்பாலும் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவே.

இதைத்தொடர்ந்து சிஎஸ்கே ஃபைனலுக்கு சென்றால் அங்கு ஏற்கெனவே முதல் முறையும் கடைசி முறையும் மோதி சிஎஸ்கேவை தோற்கடித்த டெல்லி கேப்பிடல்தான் வந்து நிற்கிறது. 2 முறை தோல்வியை பரிசளித்த டெல்லி கேப்பிட்டலை பழிதீர்க்குமா சிஎஸ்கே என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதனிடையே இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் முதல் போட்டியில் சிஎஸ்கே அணியும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இரண்டாவது போட்டியில் கொல்கத்தாவும் ராஜஸ்தானும் மோதுகின்றன. நாளை நடக்கும் இரண்டு போட்டிகளோடு ஐபிஎல் லீக் போட்டிகள் முடிவடைகின்றன.


Advertisement

Advertisement
[X] Close