[X] Close

“நான் மாட்ட மேய்க்கிறேன், நீங்க தடுப்பூசி போட்டு வாங்க”- விவசாயியை வியக்க வைத்த மருத்துவர்

வீடியோ ஸ்டோரி

கொரோனா தடுப்பூசி போடச் சென்ற மருத்துவரை ஆடு மேய்க்க அழைத்த சம்பவம் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களின் மகத்துவத்திற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.


Advertisement

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மருத்துவர் கவுஷிக் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அங்கு ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த விவசாயியை தடுப்பூசி போடுமாறு அவர் அழைக்க, “உடல்நிலை பாதிக்கப்பட்டால் ஆடுகளை யார் மேய்ப்பது?” எனக் கூறி தடுப்பூசி போடாமல் இருக்க விவசாயி காரணம் கூறியுள்ளார். இதைக்கேட்டவுடன் விவசாயியின் பேச்சுக்கு அசைந்து கொடுக்காத மருத்துவர் கவுஷிக் அவரிடம் “நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால், நான் கால்நடைகளை மேய்க்க தயாராக இருக்கிறேன். நீங்க ஊசி போட்டால் போதும்” எனக்கூறி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close