[X] Close

உ.பி வன்முறையில் பலியான விவசாயிகளின் குடும்பத்தினரை நாளை சந்திக்கிறார் ராகுல் காந்தி

இந்தியா

Rahul-Gandhi-to-meet-families-of-farmers-killed-in-UP-violence-Tomorrow

காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் நடைபெற்ற வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை நாளை சந்திக்க உள்ளார். 


Advertisement

image

அவர் உத்தரப் பிரதேசம் வர உள்ளதை காங்கிரஸ் கட்சி உறுதி செய்துள்ளது. பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை அந்த மாநில அரசு அனுமதிக்க மறுத்து வருகின்ற நிலையில் ராகுலின் பயண திட்டம் குறித்த விவரத்தை உ.பி மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் இடம் கடிதம் மூலம் தெரிவித்துள்ளது காங்கிரஸ். 


Advertisement

முன்னதாக ராகுலின் சகோதரியும், உ.பி மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க முயன்ற போது தடுத்து நிறுத்தப்பட்டு, போலீஸ் காவலில் வைக்கப்பட்டார். 

அது தொடர்பாகவும் காங்கிரஸ், மாநில அரசை கேள்வி கேட்டுள்ளது. அவர் செய்த குற்றம் என்ன? எதன் அடிப்படையில் காவலில் வைக்கப்பட்டுள்ளார்? என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பிரியங்கா காந்தியும் காவலில் இருப்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close