[X] Close

மெகா தடுப்பூசி முகாம்: பிற்பகலிலேயே இலக்கை தாண்டி அதிகமாக போடப்பட்ட தடுப்பூசி

கொரோனா வைரஸ்

Mega-Vaccine-Camp-Vaccine-overdose-beyond-the-target-in-the-afternoon

தமிழ்நாடு முழுவதும் இன்று மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில், பிற்பகல் இரண்டேகால் மணிக்கே நிர்ணயிக்கப்பட்ட இலக்கான 15 லட்சத்தை தாண்டியுள்ளது.


Advertisement

தமிழ்நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மெகா முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் இன்று 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

image


Advertisement

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி நடைபெற்ற முதல்கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 28 லட்சம் தடுப்பூசிகளும், 19ஆம் தேதி நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட முகாமில் சுமார் 16 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

image

இதன் தொடர்ச்சியாக மாநிலம் முழுவதும் உள்ள 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற்றது. இதில், 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பிற்பகல் இரண்டேகால் மணிக்கே இலக்கு தாண்டியது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close