[X] Close

உளவுபார்த்த குற்றச்சாட்டு: சீனா சிறையில் இருந்த கனடாவைச் சேர்ந்த இருவர் விடுதலை

உலகம்

Espionage-charge-two-Canadians-released-from-Chinese-prison

உளவுபார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2018ஆம் ஆண்டு கைது செய்யப்படு சீன சிறையில் இருந்த கனடாவைச் சேர்ந்த இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


Advertisement

இத்தகவலை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். உளவுபார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கடந்த 2018ஆம் ஆண்டு கனடாவைச் சேர்ந்த மைக்கேல் ஸ்பாவோர், மைக்கேல் கோவ்ரிக் ஆகிய இருவரும் சீன காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஹூவாவே நிறுவன அதிகாரி மெங் வாங்சூ கைது அமெரிக்க பிடி ஆணையின் அடிப்படையில் கனடாவில் கைது செய்யப்பட்டதற்கு பதிலடியாகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் சீனா இந்தக் குற்றச்சாட்டை மறுத்தது.

இந்நிலையில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே ஏற்பட்ட உடன்பாடைத்தொடர்ந்து மெங் வாங்சூ வெள்ளியன்று விடுதலை செய்யப்பட்டார். இந்நிலையில் கனடாவைச் சேர்ந்தவர்கள் சீனாவில் இருந்து நாடு திரும்புவதாக அறிவித்துள்ள ஜஸ்டின் ட்ரூடோ , இந்த விவகாரத்தில் துணை நின்ற அனைத்து நாடுகளுக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.


Advertisement

இதனைப்படிக்க...தமிழகத்தில் 12,525 கிராமங்களில் இணையவசதி தரும் திட்டம் 


Advertisement

Advertisement
[X] Close